திருமங்கலம்: பாமக ஆதரவு பற்றி ஜன. 2-ல் முடிவு

ஞாயிறு, 28 டிசம்பர் 2008 (12:54 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து வரும் 2ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி கூறியிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கட்சியின் இளைஞர் அணி கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு ஜி.கே. மணி பேட்டியளித்தார்.

பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 2ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், அப்போது திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும் இந்த இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றியும் இறுதி முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்றார் ஜி.கே. மணி.

வெப்துனியாவைப் படிக்கவும்