இடைத்தேர்தல அறிவிக்கப்பட்டுள்ள திருமங்கலம் தொகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வன்முறையில் 22 வாகனங்கள் சேதமடைந்தன. மோதல் காரணாக அரிவாளால் வெட்டப்பட்ட ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க. என மும்முனைப் போட்டி நிலவும் திருமங்கலம் தொகுதியில் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் பல இடங்களில் இன்று அதிகாலை வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. இதில் அ.தி.மு.க.வினரின் 21 வாகனங்களும், தி.மு.க.வினரின் ஒரு வாகனமும் சேதமடைந்தது. இதன் காரணமாக அத்தொகுதியில் பதற்றம் நிலவுகிறது.