ஈரோடு பகுதியில் மூன்று விபத்தில் 4 பே‌ர் சாவு

சனி, 27 டிசம்பர் 2008 (12:51 IST)
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடத்தில் நடந்த மூன்று விபத்துக்களில் நான்கு பேர் இறந்தனர். மேலு‌ம் 13 பேர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியபுலியூர் செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (61). இவருடைய மனைவி சீதம்மாள் (55). இவர்கள் இருவரும் நேற்று அருகில் உள்ள கிராமமான சென்னிமலைக்கவுண்டன்புதூரில் உறவினர் ஒருவர் இறந்ததை விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

கவுந்தப்பாடி பெருந்துறை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் சீதம்மாள் சம்பவ இடத்தில் இறந்தார். சுப்பிரமணியம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் சேலம் மாவட்டத்தில் இருந்து பண்ணாரி கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்ற மாருதி வேன் மீது அரசு பேருந்து மோதியது. சத்தியமங்கலம் அருகே நடந்த இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர். உடனே அரசு ஆம்புலன்ஸ் மூலம் கோபி கொண்டு சென்றனர். கோபி அருகே சென்றபோது ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதியது இதில் ராஜலட்சுமி என்ற சிறுமி இறந்தார்.

13 பேர் காயமடைந்தனர். இதேபோல் திங்களூரில் ூற்பு ஆலைக்கு சென்று திரும்பிய தட்சிணாமூர்த்தி (45) தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது மரத்தில் மோதி இறந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்