பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்

வியாழன், 25 டிசம்பர் 2008 (11:07 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி பய‌ணிக‌ளி‌ன் கூ‌ட்ட நெ‌ரிசலை‌த் த‌வி‌ர்‌ப்பத‌ற்காக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலு‌க்கு சிறப்பு ரயில்க‌ள் இ‌ய‌க்க‌ப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொட‌ர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை எழும்பூரில் இருந்து வருகிற ஜனவரி மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இய‌க்க‌ப்படு‌‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல் (எண். 0685) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரு‌ம்.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து இ‌ய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல் (0686) ஜனவரி மாதம் 6, 13, 20, 27 ஆகிய தினங்களில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும்பூ‌ரை வ‌ந்தடையு‌ம்.

திருச்சியில் இருந்து இரவு 8.30 மணிக்கு இ‌ய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பர‌யி‌ல் (0634) ஜனவரி மாதம் 4, 11, 18, 25 ஆகிய தினங்களில் புறப்பட்டு மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூரை வ‌ந்தடையு‌ம்.

மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து இ‌ய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பர‌யி‌ல் (0633) ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய தினங்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு திருச்சி சென்று சேரும்.

சென்னை எழும்பூரில் இருந்து இ‌ய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பர‌யி‌ல் (0603) ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தினங்களில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து இ‌ய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பர‌யி‌ல் (0604) ஜனவரி 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரை வ‌ந்தடையு‌ம்.

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து (வண்டி எண் 0605) ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தினங்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து (வண்டி எண் 0606) ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய தினங்களில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்து சேரும்.

சென்னை எழும்பூரில் இருந்து இ‌ய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பர‌யி‌ல் (0609) ஜனவரி 3, 10, 17, 24, 31 ஆகிய தினங்களில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவி‌ல் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து (0610) ஜனவரி 4, 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தினங்களில் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரை வ‌ந்தடையு‌ம்.

இதே போல் சென்னை எழும்பூரில் இருந்து (0611) ஜனவரி 2, 9, 16, 23, 30 ஆகிய தினங்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.30 மணிக்கு நாகர்கோவி‌ல் செ‌ன்று சேரு‌ம். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து (0612) ஜனவரி 3, 10, 17, 24, 31 ஆகிய தினங்களில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரை வ‌ந்தடையு‌ம்.

சென்னை எழும்பூரில் இருந்து (0607) ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய தினங்களில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவி‌ல் செ‌ன்று சேரு‌ம். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து (0608) ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தினங்களில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரை வ‌‌ந்தடையு‌ம்.

இதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து (0613) டிசம்பர் 27, 29, 31 ஆகிய தினங்களில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.35 மணிக்கு நாகர்கோவி‌ல் செ‌ன்று சேரு‌ம். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து (0614) டிசம்பர் 28, 30, மற்றும் ஜனவரி 1 ஆகிய தினங்களில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

சென்னை சென்டிரலில் இருந்து ராமேஸ்வரத்திற்கு (0639) இன்று (வியாழக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.

இ‌ந்த ‌சிற‌ப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்