தி.மு.கழகத்தின் 13-வது பொதுத் தேர்தல் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வருகிற 27ஆம் தேதி (சனிக்கிழமை) தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. இதில் தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான கட்சியின் உயர்மட்ட பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுதாக்கல் இன்று தொடங்கியது.
தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்வர் கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பழகன், பொருளாளர் பதவிக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை முன் மொழிந்து தற்போதைய பொருளாளரும் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் மனுக்களை தி.மு.க அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரத்திடம் வழங்கினர்.
இதில் ஒரு பதவி முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமானவரும், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆ. ராசா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பதவி யாருக்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது.