எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி

புதன், 24 டிசம்பர் 2008 (14:51 IST)
மு‌ன்னா‌ள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 21ஆ‌ம் ஆண்டு நினைவுநாளையொ‌ட்டி செ‌ன்னை கட‌ற்கரை‌யி‌ல் உ‌ள்ள அவரது ‌நினை‌‌விடத்‌தி‌ல் அ.இ.அ.‌‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா மல‌ர் வளைய‌ம் வை‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர்.

அ‌ப்போது, கட‌்‌சி‌யி‌ன் பொருளா‌ள‌ர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறு‌திமொ‌ழியை திருப்பி கூ‌றின‌ர்.

தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி மலர சபதம் ஏற்போம் என்பது உள்பட 15 உறுதிமொழி அ‌ப்போது எடுக்கப்பட்டது.

மேலு‌ம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்ற கழக தலைவர் ஜெகத்ரட்சகன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அவைத்தலைவர் முருகன், துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பார‌திய ஜனதாவை சேர்ந்த கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண் உ‌ள்பட ப‌ல்வேறு அர‌சிய‌ல் க‌ட்‌சி ‌பிரமுக‌ர்க‌ள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்