த‌மி‌ழ் எழு‌த்தாள‌ர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாடமி விருது

புதன், 24 டிசம்பர் 2008 (12:31 IST)
பிரபத‌மி‌ழஎழு‌த்தாள‌ரமேலா‌ண்மபொ‌ன்னு‌ச்சா‌மி‌க்கு 'மின்சார‌ப்பூ' என்ற சிறுகதை தொகுப்பை எழுதியத‌ற்காமத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

webdunia photoFILE
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு பிரபல தமிழ் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உள்பட 21 படைப்பாளிகள் சாகித்ய அகாடமி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

தமிழில் மேலாண்மை பொன்னுசாமிக்கு அவர் எழுதிய 'மின்சாரப்பூ' என்ற சிறுகதைகளின் தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. அவருக்கு பரிசாக ரூ.50 ஆயிரமும், ஒரு தாமிரப்பத்திரமும் வழங்கப்படும். இந்த விருது வருகிற பிப்ரவரி 17ஆ‌ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மேலாண்மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (59). ஊர் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என அழைக்கப்படுகிறார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை செயலாளராஇவரு‌க்கபொன்னுத்தாய் எ‌ன்மனை‌வியு‌ம், வைகறைசெல்வி, தென்றல் என்ற 2 மகள்களு‌ம், வெண்மணிச்செல்வன் எ‌ன்ற மகனு‌ம் உள்ளனர். 5ஆ‌ம் வகுப்புவரை படித்துள்ள பொ‌ன்னு‌ச்சா‌மி, பலசரக்கு கடை வைத்துள்ளார்.

1972இல் 'செம்மலர்' இதழில் பரிசு என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இவருடைய 24 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 5 குறுநாவல்கள், ஒரு கட்டுரை தொகுப்பை எழுதியுள்ளார்.

லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது, அமுதன் அடிகளார் விருது, வடஅமெரிக்க தமிழ்சங்க பேரவை விருது, 5 முறை ஸ்டேட் பாங்க் விருது, 8 முறை இலக்கிய சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். இவர் எழுதிய 'மின்சார பூ' என்ற சிறுகதை தொகுப்பிற்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மேலாண்மை பொன்னுசாமி‌க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலர் என்.வரதராஜன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில தலைவர் அருணன், பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், தமிழர் தந்தை ஆதித்தனார் தமிழ் பேரவை தலைவ‌ர் மண‌லி ஏ.கா‌மா‌ட்‌சி பா‌ண்டிய‌ன் ஆ‌கியோ‌ர் வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மேலா‌ண்மை பொ‌ன்னு‌ச்சா‌மியை தவிர 6 கவிஞர்களும், 3 இலக்கிய விமர்சகர்களும் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். மலையாள மொழியில் கே.பி.அப்பன் என்ற மறைந்த இலக்கிய விமர்சகர் இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.