சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் நடக்க உள்ள விடுதலை சிறுத்தைகள் மாநாட்டை சிக்கல் ஏதும் இல்லாமல் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
அவரது கருத்தைக் கேட்ட முதல்வர் மாநாட்டுக்கு அனுமதி வழங்கும்படி அதிகாரிகளிடம் கூறியதாகவும், எனவே விடுதலை சிறுத்தைகள் மாநாடு திட்டமிட்ட படி 26ஆம் தேதி நடைபெறும் என்றும் திருமாவளன் கூறினார்.
சத்தியமூர்த்தி பவன் அருகே நடந்த மோதல் தொடர்பாகவும் முதல்வரிடம் பேசியதாக தெரிவித்த திருமாவளன், அப்போது நடந்த நிகழ்வுகளை விளக்கி கூறியதாக குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் காங்கிரசுக்கு எதிராகவோ, தி.மு.க.வுக்கு எதிராகவோ, தி.மு.க. கூட்டணிக்கு எதிராகவோ செயல்படும் வகையில் நடந்து கொள்ளவில்லை என்றும் சத்தியமூர்த்தி பவன் அருகே நடந்த சம்பவம் தற்செயலாக நடந்ததே தவிர, திட்டமிட்டு நடக்கவில்லை என்று விளக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.