திருமங்கலம் : அ.இ.அ.தி.மு.க.‌வி‌ற்கு மேலு‌ம் ஒரு க‌ட்‌சி ஆதரவு

திங்கள், 22 டிசம்பர் 2008 (16:47 IST)
திரும‌ங்கல‌ம் தொகு‌தி ச‌ட்ட‌ப்பேரவை‌ இடை‌த்தே‌ர்த‌லி‌ல் அ.இ.அ‌.‌தி.மு.க‌.வி‌ற்கு த‌லி‌த் ம‌க்க‌ள் மு‌ன்ன‌ணி தனது ஆதரவை தெ‌ரி‌வி‌ப்பதாக கூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து தலித் மக்கள் முன்னணி மாநில தலைவர் குமரி அருண் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், "திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு மாநில பொதுச் செயலாளர் சேகர் அமைப்பு செயலாளர் பாபா, மதுரை மாவட்ட செயலாளர் செல்வராஜ், அமைப்பாளர் வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் தீவிர பிரசாரம் மேற்கொள்வார்கள். ஜனவரி 2ஆம் தேதி பிரசாரம் நடைபெறும்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்