வட்டார அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் வரும் 30ஆம் தேதி சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகம் தொடர்பான தமது புகார்களை பொது மக்கள் இந்த அலுவலகத்தின் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம்.
புகார்களை அனுப்பும் போது, பதிவு அஞ்சல், பார்சல், காப்பீடு செய்யப்பட்ட அஞ்சல், வி.பி., மணியார்டர் ஆகியவை அனுப்பிய தேதி, அஞ்சலகம், அனுப்பியவரின் பெயர், முகவரி மற்றும் பெற்றுக் கொண்டவரின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் குறிப்பிட வேண்டும்.
சேமிப்பு கணக்குகள், பணப்பத்திரம் தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம். பொது மக்களின் புகார்கள் 24.12.2008ஆம் தேதிக்குள் அண்ணாசாலை தலைமை அஞ்சலக அதிகாரியை வந்தடையுமாறு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.