21ஆ‌ம் தே‌தி போ‌லியோ சொ‌ட்டு ம‌ரு‌ந்து முகா‌ம்: செ‌ன்னை‌யி‌ல் கருணா‌நி‌தி துவ‌க்‌கி வை‌க்‌கிறா‌ர்

புதன், 17 டிசம்பர் 2008 (10:22 IST)
போலியோ நோயை தடுக்க குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாமை, முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி வரு‌ம் 21ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 67 லட்சம் குழந்தைகளுக்கு, வரு‌ம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இ‌ந்த முகா‌ம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. அரசு, மாநகராட்சி மருத்துவமனைகள், சத்துணவு கூடங்கள், சுற்றுலா மையங்கள், பேரு‌ந்து, ரயில், விமான நிலையங்கள், மெரினா கடற்கரை என 40 ஆயிரத்து 399 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த பணியில் பொதுத் சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சிகளைச் சேர்ந்த ஊழியர்கள் 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். நடமாடும் பூத் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படு‌கிறது.

சொட்டு மருந்து முகாமை, முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி வரு‌ம் 21ஆம் தேதி செ‌ன்னை‌யி‌ல் தொடங்கி வைக்கிறார். 2வது கட்ட முகாம் பிப்ரவரி 1‌ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்