கட்டபொம்மன் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு

புதன், 17 டிசம்பர் 2008 (10:14 IST)
க‌ட்டபொ‌‌ம்ம‌ன் வா‌ரிசுகளு‌க்கு ஓ‌ய்வூ‌‌திய‌‌த்தை அ‌திக‌ரி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்‌பி‌ல், விடுதலைப் போரில் பங்குகொண்ட வீரபெருமக்களின் வழித்தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

அதன்படி, வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள் 7 பேர், மருதுபாண்டிய சகோதரர்கள் வழித்தோன்றல்கள் 132 பேர், முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள் 80 பேர் ஆகியோருக்கு இதுவரை ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இதை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்