தமிழக காவல்துறை தலைமை ஆய்வாளர்கள் 7 பேர் மாற்றம் : அரசு உத்தரவு
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (21:46 IST)
தமிழக காவல்துறை தலைமை ஆய்வாளர்கள் 7 பேர், ஒரு காவல் துறை துணை தலைமை ஆய்வாளர் ஆகியோரை மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில், "குற்ற சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறை தலைமை ஆய்வாளர் (ஐ.ஜி.) என். தமிழ்செல்வன், கமாண்டோ படை காவல்துறை தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கமாண்டோ படை காவல்துறை தலைமை ஆய்வாளர் அசுதோஸ் சுக்லா, குற்றப்பிரிவு விசேஷ புலனாய்வு காவல்துறை தலைமை ஆய்வாளராக பொறுப்பேற்பார்.
சென்னை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தலைமை ஆய்வாளர் துக்கையாண்டி, மாநில லஞ்ச ஒழிப்பு விசேஷ பிரிவு காவல்துறை தலைமை ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல்துறை தலைமை ஆய்வாளர் கே.பி.மகேந்திரன், சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள மாநில போக்குவரத்து கழகத்தின் தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக உள்ள காவல்துறை தலைமை ஆய்வாளர் ராஜேஷ்தாஸ், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல்துறை தலைமை ஆய்வாளராக பொறுப்பேற்பார்.
சேலம் நகர ஆணையர் காவல்துறை தலைமை ஆய்வாளர் செண்பகராமன், திருச்சியில் உள்ள ஆயுதப்படை காவல்துறை தலைமை ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி ஆயுதப்படை காவல்துறை தலைமை ஆய்வாளர் சுனில்குமார் சிங், சேலம் நகரத்தின் புதிய ஆணையராக பொறுப்பேற்பார்.
சென்னை சி.பி.சி.ஐ.டி. காவல் துறை துணை தலைமை ஆய்வாளர் கருணாசாகர் மாற்றப்பட்டுள்ளார். இவர், சென்னை ஆயுதப்படை போலீஸ் காவல் துறை துணை தலைமை ஆய்வாளராக பொறுப்பேற்பார்" என்று கூறப்பட்டுள்ளது.