காற்றாலை மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசு அதிகரிப்பு!

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (18:51 IST)
முத‌லீ‌ட்டை அ‌திக‌ரி‌க்கு‌ம் வகை‌யி‌ல், காற்றாலை மினசக்திக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.90 என்பதிலிருந்து ரூ.3.40 என உயர்த்த உத்தேசித்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக அ‌ந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு, தமிழ்நாட்டில் இருந்து குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு மெதுவாக மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த முதலீடுகள் குறைவதைத் தடுப்பது மிக முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள மின் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்தில் மின்திறனை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அனல் மின் நிலையம் அமைத்து மின் உற்பத்தி தொடங்குவதற்கு 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும். காற்றாலைகள் நிறுவுவதற்கு 3 மாதம் முதல் 6 மாதங்களே ஆகும். எனவே தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலீட்டை வரவேற்பது அவசியமாகவும், அவசரமானதாகவும் உள்ளது.

எனவே, காற்றாலை மின்சக்திக்கான மின் கட்டணத்தை ூனிட் ஒன்றுக்கு ரூ.2.90 என்பதிலிருந்து ரூ.3.40 என்று உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தேசித்துள்ளது" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்