மண்டபத்தில் 20 செ.மீ மழை!
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (17:35 IST)
தமிழகத்தில் கடலோரப் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது.
இதனிடையே அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் கடலோரப் பகுதியான புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களிலும், வட தமிழகத்தின் கடலோரப் பகுதியான காரைக்காலிலும் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகமான நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் வட தமிழகம், புதுச்சேரியிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பெய்த மழை அளவு செ.மீட்டரில் வருமாறு:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் 16, பாம்பன் 14, தங்கச்சி மடம் 13, கடலாடி 7, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், திருச்சி மாவட்டம் புல்லம்பாடி, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை ஆகிய இடங்களில் 3.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, முதுகுளத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, பெரம்பலூர், திருச்சி மாவட்டம் லால்குடி, சமயபுரம், திருச்சி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தலா 2.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தொழுதூர், விருத்தாசலம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணம், கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், திருத்துறைபூண்டி, வலங்கைமான், திருவாரூர், நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம், கரம்பக்குடி, மணல்மேல்குடி, புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், சாத்தான்குளம், கோவை மாவட்டம் உடுமலை, ஈரோடு மாவட்டம் தாராபுரம், நீலகிரி மாவட்டம் கிட்டி, கரூர் மாவட்டம் கடவூர், தோகைமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான், படலூர், திருச்சி விமான நிலையம், திருச்சி மாவட்டம் துறையூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் மாவட்டம் சிவகங்கா, சாத்தூர், நாகப்பட்டிணம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 1.