'காவ‌ல்துறை‌யி‌ன் ந‌ண்ப‌ர்க‌ள்' குழு அமை‌க்க அ‌றிவுறு‌த்த‌ல்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (13:21 IST)
காவ‌ல்துறை‌க்கு‌ம், பொதும‌க்களு‌க்கு‌ம் இடையே ஒரு ந‌ல்‌லிண‌‌க்க‌த்தை ஏ‌ற்ப‌டு‌த்த த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனை‌த்து கடலோர காவ‌ல்‌நிலைய‌ங்க‌ளி‌ல் 'காவ‌ல்துறை‌யி‌ன் ந‌ண்ப‌ன்’ எ‌ன்ற குழுவை அமை‌க்கு‌‌‌மாறு த‌மிழக காவ‌ல்துறை தலைமை அலுவலக‌ம் அ‌றி‌வு‌றுத்‌தி உ‌ள்ளது.

இத‌ன் மூல‌ம் ‌மீனவ‌ர்க‌ளி‌ன் பாதுகா‌ப்பு உறுத‌ி‌ப்படு‌த்து‌வத‌ற்காகவு‌ம், கடலோர‌ப் பாதுகா‌ப்பை வலு‌ப்படு‌த்துவத‌ற்காகவு‌ம் இ‌ந்த குழு அமை‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று காவ‌ல்துறை வ‌ட்டார‌த்தை மே‌ற்கோ‌ள் கா‌ட்டி யு.எ‌ன்.ஐ. செ‌‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

பு‌திதாபுது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌‌ம் ‌திருபுவனவாச‌ல், மண‌ல்மே‌ல்குடி‌, த‌ஞ்சாவூ‌ர் மாவ‌ட்ட‌ம் சேதுபாவச‌த்‌திர‌ம் ஆ‌கிய கடலோர‌ப் ப‌கு‌தி‌க‌ளி‌ல் காவ‌ல்‌நிலைய‌ம் அமை‌க்க‌ப்படு‌கிறது.

இ‌‌ந்த கா‌வ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து 'காவல‌ர்க‌ளி‌ன் ந‌ண்ப‌ன்' குழு‌‌க்களு‌க்கு ஆ‌ட்க‌ள் தே‌ர்வு செ‌ய்ய‌ப்படு‌கிறது.

மேலு‌ம் புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌ம் கோ‌ட்டை‌ப்ப‌ட்டிண‌ம், முத‌்து‌க்குடி ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் ‌புற‌க்காவ‌ல்‌நிலைய‌ம் அமை‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்