ஓட்டப்பிடாரம் அடுத்த அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன், தனது நண்பர்கள் இளையராஜா (27), ராமச்சந்திரன் (28) ஆகியோருடன் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு ஆம்னி வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வேனை கணேசன் என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை ஓட்டப்பிடாரம் அடுத்த முருகப்பட்டி விலக்கு அருகே ஆம்னி வேன் வந்த போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
வேனில் இருந்த கணேசன், இளையராஜா, ராமச்சந்திரன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.