ஈரோட்டில் 19 செ.மீ மழை!
சனி, 29 நவம்பர் 2008 (17:50 IST)
வட தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. ஈரோட்டில் அதிகபட்சமாக 19 செ.மீ மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கரூர் பரமத்தி, நிலக்கோட்டை தலா 9 செ.மீ மழையும், சோழவரம், மதுரை மாவட்டம் பெரையூர் தலா 8 செ.மீ மழையும், காஞ்சிபுரம், ஆரணி, போளூர், சேலம் மாவட்டம் சங்ககிரி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழையும் செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பூண்டி, செங்குன்றம், திருத்தணி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், நாமக்கல் மாவட்டம் மங்கலாபுரம், திருச்செங்கோடு, மேட்டூர் அணை, ஏற்காடு, கரூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை விமான நிலையம், பூந்தமல்லி, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டம் கொரட்டூர், செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர், திருவண்ணாமலை, சேந்தமங்கலம், பவானி, கரூர் மாவட்டம் கடவூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, தாமரைப்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, வானூர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, பரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.