சென்னை, புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.
கொளத்தூர் சீனிவாசா நகரை சேர்ந்த சீனிவாசன் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிந்தான். அதே போல் பெரம்பூரில் பள்ளத்தில் விழுந்து பால்ராஜ் என்பவர் பலியானார். அமைந்தகரையில் ஆட்டோ மீது மரம் விழுந்து சார்லஸ் என்பவர் உயிரிழந்தார்.
குன்றத்தூர் பொள்ளச்சேரி மெயின் ரோட்டை சேர்ந்த விஜயகுமார் என்ற மாணவன், விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பலியானான்.
துரைபாக்கம் கண்ணகி நகரில் ராஜ் என்பவரும், சிந்தாதிரிப்பேட்டையில் ராஜ்குமார் என்பவர் மழைக்கு பலியானார்கள். மேலும் அடையாளம் தெரியாத 4 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.