புழல் ஏரி திறப்பு : கரையோர ம‌க்க‌ள் வெ‌‌ளியே‌ற்ற‌ம்

சனி, 29 நவம்பர் 2008 (11:31 IST)
கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் ‌நிர‌‌ம்‌பிய‌தன் காரணமாக ‌திற‌ந்து ிட‌ப்பட்டு‌ள்ளது. தற்போது புழல் ஏரியும் ‌திற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் கரையோர‌த்‌‌தி‌ல் இரு‌க்கு‌ம் ம‌க்க‌ள் வெ‌‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

த‌மிழக‌த்‌தி‌ல் பெ‌ய்து வரு‌ம் கனமழை காரணமாக ஏ‌‌ரி, குள‌ங்க‌ள் ‌நிர‌ம்‌பி வ‌ழி‌கிறது. செங்குன்றத்தில் அமைந்துள்ள புழல் ஏரியின் மொ‌த்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி.

ஏ‌ரி‌யி‌ன் இன்றைய இருப்பு 2902 மில்லியன் கனஅடி. மொத்த உயரம் 21.20 அடி. நேற்‌றிரவு நீர்மட்டம் 20 அடியை எட்டியது. எனவே, ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்‌றிரவு 9.45 மணிக்கு புழல் ஏரி திறக்கப்பட்டது.

ஏரிக்கு 5 ஆயிரத்து 77 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து 1130 கனஅடி வெளியேற்றப்படுகிறது. இதில் 130 கனஅடி குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. 1000 கனஅடி வெளியே திறந்து விடப்படுகிறது.

புழல் ஏரி திறந்து விட‌ப்ப‌ட்டு‌ள்ளதால் சாமியார்மடம், வடகரை, புழல், தண்டல் கழனி, கிராண்ட்லைன், மணலி, சடையன்குப்பம், புழல் நீர் வடிகால்வாய் பகுதிகளில் குடியிருப்போர் மேடான பகுதிகளுக்கு செல்லும்படி த‌மிழக அரசு எச்சரிக்கை ‌விடு‌த்து‌ள்ளது.

மழை மீண்டும் பெய்தால் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும். எனவே வடிகால் பகுதிகளில் குடியிருப்போர் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூண்டி, செம்பரம்பாக்கம் ஆ‌கிய ஏரிகள் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர‌ங்க‌ளி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்க‌ள் அனைவரு‌ம் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

கரையோர வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது, என்றாலும் இன்று மழை குறைந்து விட்டதால் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனா‌ர் ஓரளவு வெள்ள அபாயம் குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்