ஒரத்தநாட்டில் 66 செ.மீ மழை!
வியாழன், 27 நவம்பர் 2008 (17:35 IST)
தமிழகத்தில் நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்தது. ஒரத்தநாட்டில் அதிகபட்சமாக 66 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்ததாக தஞ்சாவூரில் 53 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் வட தமிழகம், புதுச்சேரியில் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு செ.மீட்டரில் வருமாறு :
ஒரத்தநாடு (66), தஞ்சாவூருக்கு (53) அடுத்தபடியாக வேதாரண்யத்தில் 42 செ.மீ மழையும், அதிராம்பட்டிணத்தில் 33 செ.மீ. மழையும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 30 செ.மீ மழையும், கும்பகோணத்தில் 26 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மன்னார்குடி, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தலா 25, நீடாமங்கலம், காட்டுமன்னார்கோவில் தலா 24, திருத்துறைபூண்டி 23, வலங்கைமான் 22, புவனகிரி, தஞ்சாவூர் முடுக்கூர் தலா 21, திருவிடைமருதூர் 20, சிதம்பரம், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தலா 19.
திருவாரூர், திருக்காட்டுபள்ளி தலா 18, பரங்கிபேட்டை, கொடவாசல் தலா 17, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, விழுப்புரம், சேத்தியாத்தோப்பு 16, ஸ்ரீமுஷ்ணம், மயிலாடுதுறை, கந்தார்வகோட்டை, மணல்மேடுகுடி, ஜெயம்கொண்டம், காஞ்சிபுரம், புல்லம்பாடி, லால்குடி தலா 15.
சென்னை, வானூர், கல்லணை, செம்பரம்பாக்கம், சீர்காழி, பெருங்கலூர் தலா 14, சென்னை விமான நிலையம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர் தொழுதூர், செஞ்சி, அரியலூர் 13, அண்ணா பல்கலைக்கழகம், செங்கல்பட்டு, செய்யூர், பூந்தமல்லி, கொரட்டூர், திண்டிவனம், கொள்ளிடம் தலா 12.
தாம்பரம், உத்திரமேரூர், திருவாரூர், செங்குன்றம், உளுந்தூர்பேட்டை, புதுச்சேரி விமான நிலையம், புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருமயம், வந்தவாசி, செய்யூர், சமயபுரம் தலா 11, பள்ளிப்பட்டு, பூண்டி, கடலூர், கீரனூர், பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம், திருச்சி தலா 10.
சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், தாமரைப்பாக்கம், விருத்தாசலம், திருக்கோவிலூர், வல்லம், அரக்கோணம், வேலூர், பெரம்பலூர், திருச்சி விமான நிலையம் தலா 9, காரைக்கால், தரங்கம்பாடி, புதுக்கோட்டை இலுப்பூர், ஆரணி, பெரம்பலூர் மாவட்டம் படலூர் தலா 8, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கடலூர் மாவட்டம் அண்ணாமலைநகர், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், திருவண்ணாமலை, ஆம்பூர், சோழிங்கர், காரைக்குடி தலா 7.
அடுத்த இரண்டு நாட்களில் சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.