அருந்ததியருக்கு 3 ‌விழு‌க்காடு உள் ஒதுக்கீடு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

வியாழன், 27 நவம்பர் 2008 (15:18 IST)
ஆதி திராவிடர்கள் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் 18 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீட்டில், அருந்ததிய‌ர் ‌பி‌ரி‌வினை உள்ளடக்கி 3 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் ந‌ட‌ந்த அமை‌ச்சரவை கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டது.

செ‌ன்னதலைமை‌சசெயலக‌த்‌தி‌லமுதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று 33-வது அமை‌ச்சரவகூட்டம் நடைபெற்றது.

இ‌ந்கூட்டத்தில், அருந்ததியருக்கான சிறப்பு இட ஒதுக்கீடு குறித்தும், நீதியரசர் ஜனார்த்தனமஅளித்த அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. நீதியரசர் ஜனார்த்தனமஅமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, அவர் விரிவாக இந்தப் பொருள் குறித்து அமைச்சரவையில் விளக்கினார்.

தற்போது தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் அனைவருக்கும் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் 18 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீட்டில், ஆதி திராவிடர்களுள் கடைநிலையில் உள்ள அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தன‌த்‌தி‌ன் விரிவான அறிக்கையினைப் அமை‌ச்சரவை பரிசீலனை செய்தது.

ஆதி திராவிடர்கள் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் 18 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீட்டில், அருந்ததியர் என்கின்ற சமுதாயத் தொகுப்பின்கீழ் இடம் பெற்றுள்ள அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கி 3 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்வதென்றும், அந்த இட ஒதுக்கீட்டின் செயலாக்கம் குறித்து அமைச்சரவை குழு ஒன்றினை அமைத்து ஆய்வு செய்வதென்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்