ஜெயலலிதா கார் தா‌க்க‌ப்ப‌ட்ட ‌விவகார‌ம் : சென்னையில் அ.இ.அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

சனி, 15 நவம்பர் 2008 (15:19 IST)
பசு‌ம்பொ‌ன்‌னி‌ல் அ.இ.அ‌‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா‌வி‌ன் கா‌ர் தா‌க்க‌‌ப்ப‌ட்டதை‌க் க‌ண்டி‌த்து‌, செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யின‌ர் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

பசும்பொன்னில் கட‌ந்த 30ஆ‌ம் தே‌தி நட‌ந்த தேவர் ஜெயந்திவிழா‌வி‌ல் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கார் மீது ம‌ர்ம கு‌ம்பலை‌ச் சே‌ர்‌ந்த சிலர் கல்வீசி தாக்கினார்கள்.

கா‌ர் தா‌க்க‌ப்ப‌ட்டதை‌க் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் மாவ‌ட்ட செயல‌ர் சேக‌ர்பாபு தலைமை‌யி‌ல் இ‌ன்று அ‌க்‌க‌ட்‌சியை‌ச் சே‌‌ர்‌ந்தவ‌ர்க‌ள் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம் முன்பு க‌ண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

முன்னாள் அமைச்சர் தம்பித்துரை, வளர்மதி ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் தம்பித்துரை பேசுகையில், "தமிழ்நாடு இருளில் மூழ்கி உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாட்டின் வளர்ச்சியும் மக்கள் நலனும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எப்படியாவது ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்து அரசியலை விட்டு ஒதுக்கி விடலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால் அடுத்த முதல்வர் ஜெயலலிதா தான் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர்" என்றார்.

இ‌ந்த க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் அ‌க்‌க‌ட்‌சியை‌ச் சே‌ர்‌ந்த ஏராளமானவ‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்