திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் கணவனின் தவறான நடத்தைக் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த இளம்பெண் தனது மூன்று குழந்தைகளுக்கும் தீவைத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பேரம்பாக்கத்தை அடுத்த கூவம் புதிய காலனி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சந்தோஷ் (வயது 3), டெய்சி ராணி (2), மற்றும் தயாநிதி (6 மாதம்) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.
மனோகரனுக்கும் அதே ஊரை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து இந்த தொடர்பை விட்டு விடும்படி பொற்கொடி பலமுறை தனது கணவரிடம் எடுத்துக் கூறியும் அவர் கேட்காததால் மனவருத்தம் அடைந்தார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தன்னுடைய 3 குழந்தைகளையும் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.