சாலை விபத்து: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி!
வியாழன், 6 நவம்பர் 2008 (12:36 IST)
சென்னையில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடசென்னையில் இருந்து தண்டையார்பேட்டைக்கு முகமது பக்ருதீனும்(25) அவரது நண்பர் செல்வாவும் (25) இரு சக்கர வாகனத்தில் நேற்றிரவு தண்டையார்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, இரு சக்கர வாகனத்தில் மீது பயங்கரமாக மோதியது. இதில் முகமது பக்ருதீன், செல்வா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதேபோல் நடந்த மற்றொரு விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ரம்யா, கிண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தபோது லாரி மோதி பலியானார்.