17 ஆ‌ம் தே‌தி கடையடை‌ப்பு‌க்கு பொதும‌க்க‌ள் ஆதரவு : வெள்ளையன் வே‌ண்டுகோ‌ள்!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (17:20 IST)
''ஈழத் தமிழ் மண்ணில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலையை இந்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த கோரி வரு‌ம் 17ஆ‌மதே‌தி நடைபெறு‌மகடையடை‌ப்பபோரா‌ட்ட‌த்து‌க்கபொது‌ம‌க்க‌ளஆதரவவே‌ண்டு‌ம்'' எ‌ன்றதமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈழத் தமிழ் மண்ணில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலையைக் கண்டித்தும் இந்தத் தமிழனப் படுகொலையை இந்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும், கடல் சார்ந்து வாழும் மண்ணின் மைந்தர்களான தமிழக மீனவர்களை ஈவிரக்கில்லாமல் சுட்டுக்கொல்லும் சிங்களக் கடற்படைக்குப் பாடம் புகட்டக்கோரியும் வருகிற 17ஆ‌மதேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்துவதென்றும் தமிழகத்திலுள்ள பெரு வணிகர்கள் முதல் சிறு வணிகர்கள் வரை அனைவரையும் அதில் பங்கேற்கச் செய்வதென்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தின் ஒட்டு மொத்த உணர்வையும் வணிகர்கள் வெளிப்படுத்த வேண்டும். தமிழக வணிகர்கள் ஒவ்வொருவரும் உணர்வோடும் உரிமையோடும் இந்த கடையடைப்பில் பங்கேற்க வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழக வணிகர்களின் எழுச்சியைப் பார்த்த பிறகாவது, அறிந்தும் அறியாதைப் போல் ஆழ்துயில் ஆழ்ந்திருக்கும் இந்திய அரசு விழித்தெவேண்டும். எனவே வணிகர்களுக்குப் பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும்'' எ‌ன்றவெ‌ள்ளைய‌னவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்