சென்னை கல்லூரி மாணவர்கள் வனவிழிப்புணர்வு பயணம்!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:43 IST)
வன விலங்குகள் வாரவிழாவை முன்னிட்டு சென்னை க‌வி‌ன் அரசு கல்லூரி மாணவர்கள் சத்தியம‌ங்கல‌ம் வனப்பகுதியில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

webdunia photoWD
இத‌ற்கான ஏ‌ற்பாடுகளை சத்தியமங்கலம் மாவட்ட வனகோட்டம் மற்றும் சுடர் தொண்டு நிறுவனங்கள் செய்ன. இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தை சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி எஸ்.இராமசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். தலமலை வனப்பகுதியில் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று எப்படி சார்ந்து வாழ்கின்றன இவற்றை காப்பதின் மூலம் வனத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து திருப்பூர் கல்லூரி முதல்வர் இளங்கோவன் விளக்கமளித்தார்.

இதன் முக்கிய‌‌த்துவத்தை சென்னை பறவைகள் ஆய்வாளர்கள் சந்திரசேகர், வெங்கட் ஆகியோர் எடுத்துரைத்தனர். வனப்பயணத்திற்கான ஏற்பாடுகளை பவானிசாகர் ரேஞ்சர் டி.மோகன், சுடர் தொண்டு நிறுவன செயலாளர் நடராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.