இலங்கை த‌மிழ‌ர் படுகொலையை கண்டித்து 17இ‌ல் கடையடைப்பு : வ‌ணிக‌ர் பேரவை!

சனி, 11 அக்டோபர் 2008 (09:32 IST)
இல‌ங்கை‌யி‌லநட‌க்கு‌மஇன‌ப்படுகொலையக‌ண்டி‌த்தத‌மி‌ழ்நாடவ‌ணிக‌ரச‌ங்க‌‌ங்க‌ளி‌னபேரவசா‌ர்‌பி‌லவரு‌ம் 17ஆ‌மதே‌தி த‌மிழக‌மமுழுவது‌மகடையடை‌ப்பபோரா‌ட்ட‌மநட‌த்த‌ப்போவதாஅ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டுள்ளது.

இதகு‌றி‌த்ததமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத் தமிழ் மண்ணில் இல‌ங்கஅரசமேற்கொண்டு வரும் இனப் படுகொலையை கண்டித்தும், இந்த தமிழினப் படுகொலையை இந்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும், கடல்சார்ந்து வாழும் மண்ணின் மைந்தர்களான தமிழக மீனவர்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படைக்கு பாடம் புகட்டக்கோரியும் வரு‌ம் 17ஆ‌மதே‌தி (வெள்ளிக்கிழமை)தமிழகமமுழுவதும் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உயிரோடும், உணர்வோடும் தொடர்புடைய போராட்டம் என்பதால் இந்த கடையடைப்பு போராட்டத்தில் இருந்து எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதிவிலக்கு கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

மிக சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய நகைக் கடைகள் வரை, அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டு தமிழர்களின் உணர்வை வணிகர்கள் வெளிப்படுத்த வேண்டும்" எ‌ன்று த.வெள்ளையன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்