வேலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இரவு சாப்பாட்டு நேரம் முடித்ததும் இரவு 8.15 மணி முதல் 8.30 மணி வரை, அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்பு உள்ள வராண்டாவில் நிற்பதற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இதேபோல் நேற்றிரவு சாப்பாட்டுக்கு பிறகு அங்குள்ள வராண்டாவில் சிறுவர் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் வராண்டாவின் மேல்கூரையில் உள்ள ஒரு இரும்புகம்பியை உடைத்துள்ளான்.
இதைத் தொடர்ந்து அந்த வழியாக 9 சிறுவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர், வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.