சென்னை மாநகராட்சியில் 44-வது வார்டில் தி.மு.க. சார்பில் நடராஜனும், அ.இ.அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பிரதாப்குமாரும், பா.ஜ.க சார்பில் சுரேஷ் என்ற சுரேஷ் ஜெயினும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாஸ்கர் என்ற பாஸ்கரன் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.
இதில் தி.மு.க வேட்பாளர் நடராஜன் 3,039 ஓட்டுகளும், அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் 1,261 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இதில் தி.மு.க வேட்பாளர் 1,788 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
18-வது வார்டில் தி.மு.க. சார்பில் கிருஷ்ணனும், அ.இ.அ.தி.மு.க. சார்பில் சேகர் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணன் 3,712 ஓட்டுகளும், அ.இ.அ.தி.மு.க 1553 ஓட்டுகளும் பெற்றிருந்தன இதில் தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணன் 2,159 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம் கதிர்வேடு ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பாலகிருஷ்ணன் 105 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
தே.மு.தி.க. வெற்றி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் நகராட்சியில் 2 வார்டுகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் தலா ஒரு இடத்தை கைப்பற்றியது.
வேலூர் மாவட்டம், தாராபடவேடு நகராட்சியில் 13வது வார்டு இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் கே.ஆர்.ரவி 552 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கோவிந்தன் 456 வாக்குகள் கிடைத்தது.
15வார்டு தேர்தலில் தி.மு.க வேட்பாளர் டி.ஜமுனா 504 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் ஜோதிக்கு 70 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
ஆற்காடு நகராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் ஜெயராஜ் 527 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க ஆதரவு பெற்று சுயேட்சை வேட்பாளர் ஹேம சந்தோஷணூக்கு 197 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டை பேரூராட்சி 11வது வார்டில் தி.மு.க வேட்பாளர் ரமேஷ் 60 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எஞ்சிய 2 வார்டுகளையும் அ.இ.அ.தி.மு.க கைப்பற்றியது.
ஒரத்தநாடு 2வது வார்டில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் 70 வாக்குகள் வித்தியாசத்திலும், திருக்காட்டுப்பள்ளி 14வது வார்டில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சன் (எ) தன்ராஜ் 60 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
தஞ்சை ஊராட்சி ஒன்றிய 9வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராஜா (எ) நித்தியானந்தம் 95 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருவோணம் ஒன்றியம் சோழகன் குடிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த அனுராதா 90 வாக்குகள் வித்தியாசத்திலும், சிவவிடுதி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் அ.இ.அ.தி.மு.க.வின் ஆனந்த்ராஜ் 215 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.