அண்ணா நூற்றாண்டு விழாயொ‌ட்டி 1,405 ஆயுள் கைதிகள் விடுதலை: கருணாநிதி!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (15:16 IST)
அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு ‌விழாவையொ‌ட்டி செ‌ப்ட‌ம்ப‌ர் 15ஆ‌ம் தே‌தி 1,405 ஆயு‌ள் கை‌திக‌ள் ‌விடுதலை செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பேரறிஞர் அண்ணா‌ நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைச் சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களில் 15-9-08 அன்று 7 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும்,

60 வயதும் அதற்கு மேலாகவும் வயதுள்ள 5 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி விடுதலை அளிப்பது என ஆளுந‌ரி‌ன் ஒப்புதல் பெற்று முடிவு செய்யப்பட்டது என்றும்,

இதன்படி தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்தும் 22 பெண் கைதிகள் உள்பட 1,405 ஆயுள் தண்டனை கைதிகள் 15.9.08 அன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்