இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.