வீட்டுமனை பட்டா வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: வரதராஜ‌ன்!

''புற‌ம்போ‌க்கு வீட்டுமனை பட்டா வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்'' என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் ஏழை, எளிய மக்கள் வீட்டுமனை பட்டா மற்றும் மனை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 15 லட்சம் பேர் மனைபட்டா கேட்டு, மாவட்ட ஆ‌‌ட்‌சிய‌ர்களிடம் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

வீட்டுமனை பட்டா கேட்டு பல்வேறு கட்ட இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன் பின்னர், பட்டா வழங்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்தியும், காலக்கெடுவை நீடித்தும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்பேரில், பல லட்சம் குடும்பத்தினருக்கு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் பல லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், பட்டா அளிப்பதற்கான தளர்வு உத்தரவு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கும் வரையில், அரசு உத்தரவின் காலத்தை நீடித்து உத்தரவிட வேண்டும்'' எ‌ன்று வரதராஜன் கூறியுள்ளார்.