பாராளும‌ன்ற தே‌ர்த‌லி‌ல் பா.ஜ., கா‌‌‌‌ங், ‌தி.மு.க. அ‌ல்லாத க‌ட்‌சியுட‌ன் கூ‌ட்ட‌ணி: தா.பா‌ண்டிய‌ன்!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (10:55 IST)
''வருகின்ற பாராளும‌ன்ற தேர்தலில் பா.ஜ.க, காங்‌கிர‌ஸ், தி.ு.க அல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளோம் '' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

webdunia photoFILE
சிவகங்கையில் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், பணவீக்கம் குறைந்த மாதிரி பொய்யான புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த பொருளின் விலையும் இம்மி அளவுகூட குறையவில்லை.

நியாய‌விலை கடைக‌ளி‌ல் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதை மக்கள் வரவேற்கவில்லை. தவிடு 6 ரூபாய்க்கு விற்கிறது. உப்பு 7 ரூபாய்க்கு விற்கிறது.

பருப்பு, காய்கறி போன்ற எந்த அத்‌‌தியாவசிய பொருளின் விலையும் குறையவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இப்படிப்பட்ட நிலையில் அரிசி மட்டும் 1 ரூபாய்க்கு வாங்கி என்ன செய்ய முடியும்?

1991 முதல் இதுரை மின்சார உற்பத்திக்கான எந்த திட்டத்தையும் மாநில அரசு செயல்படுத்தவில்லை. அயல் நாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லா மின்சாரம் அளிப்பதாக ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்த விதிகளை உடனடியாக அரசு வெளியிட வேண்டும்.

மின்தடை பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதை விவாதிக்க பேரவையை கூட்ட வேண்டும். வருகின்ற பாராளும‌ன்ற தேர்தலில் பா.ஜ.க, காங்‌கிர‌ஸ், தி.ு.க அல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளோம் எ‌ன்று தா.பாண்டியன் கூறினார்.