அ‌க்.18‌ல் சென்னையில் தே.மு.தி.க இளைஞர் அணி மாநாடு: ‌விஜயகா‌ந்‌த் அ‌றி‌வி‌ப்பு!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (10:32 IST)
''சென்னையில் அக்டோபர் 18ஆம் தேதி தே.ு.ி.க இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிறது'' என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல்'' இளைஞர்களின் அறிவும், ஆற்றலுமே ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும். அவர்களால்தான் புதிய சமுதாயத்தை அமைக்க முடியும். அத்தகைய இளைஞர்களை தமிழகம் முழுவதும் பெற்றிருக்கும் ஒரே இயக்கம் தே.ு.ி.க.தான்.

மாற்று கட்சியினரும் இதனால் மருண்டு, இளைஞர்களை ஈர்க்க மூளையை குழப்பிக் கொண்டிருக்கின்றனர். அதில் அவர்கள் தோற்றுவிட்டனர் என்பது ஊரறிந்த உண்மை.

தமிழகத்தில் எங்கும் பரவியுள்ள ஊழலை ஒழித்து, வறுமையையும், வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் போக்கும் புனித பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இதில் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளவர்களே தே.ு.ி.க.வினர்.

தமிழகத்தில் எதிர்காலம் நம் கையில் உள்ளது. அதன் முதற்படியாக, அக்டோபர் 18ஆம் தேதி, சென்னை தீவு திடலில் இளைஞர் சார்பில் அணி பேரணியும், மாநாடும் நடக்க உள்ளது. தொண்டர்கள் இன்றிலிருந்தே மாநாட்டுக்கு தயாராக வேண்டும். இதுவரை காணாத மாநாடு என பெருமைப்படும் வகையில் இருக்க வேண்டும்'' எ‌ன்று விஜயகாந்த் கூறியுள்ளார்.