என்.எல்.சி. ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் ‌வில‌க்க‌ல்!

புதன், 10 செப்டம்பர் 2008 (09:42 IST)
நி‌ர்வாக‌த்‌தினருட‌ன் நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌‌ல் உட‌ன்பாடு ஏ‌ற்ப‌ட்ட‌தை தொட‌ர்‌ந்து என்.எல்.ி. ஒ‌ப்ப‌ந்த தொழிலாளர்க‌ள் நே‌ற்று மாலை வேலை நிறுத்த‌த்தை ‌விலக்‌கி‌க் கொ‌‌‌‌ண்டன‌ர்.

நெய்வேலி சுரங்க ஒப்பந்தத் தொழிலாளி கொளஞ்சியப்பன் 4ம் தேதி விபத்தில் இறந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், சுரங்கத்தில் தொடர் விபத்துகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இந்நிலையில், என்.எல்.ி. நிர்வாகத்துக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மத்திய மண்டலத் தொழிலாளர் நல ஆணையர் வி.முரளி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர்கள் சார்பில் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி செயலர் எம்.சேகர், நிர்வாகத் தரப்பில் என்.எல்.சி பொது மேலாளர் குருசாமிநாதன், துணைப் பொது மேலாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பே‌ச்சுவா‌ர்‌‌த்தை‌யி‌ல் உட‌‌ன்பாடு ஏ‌ற்ப‌ட்டதாக நே‌ற்று மாலை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இதையடுத்து, வேலை நிறுத்த‌ம் ‌வில‌க்‌கி‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

இற‌ந்து போன கொளஞ்சியப்பன் குடும்பத்துக்கு ரூ.6.75 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவரது மகன் மணியரசனுக்கு நிரந்த வேலை வழங்கவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்