இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளில் உறுப்பினர்களாக இணைந்துள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும், கம்ப்யூட்டர் மையங்கள், கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, யோகா பயிற்சி, வாகன ஓட்டுனர் பயிற்சி, நூலகம் பராமரித்தல் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக, 15 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று, தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கான சிறப்பு திட்டங்களை நான் தொடங்கி வைக்கவுள்ளேன். அதனைத் தொடர்ந்து படிப்படியாக இத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கி வைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.