கூ‌ட்ட‌ணி வை‌க்க க‌ம்யூ‌னி‌ஸ்டுகளு‌க்கு தூ‌ண்டி‌ல் போட முனை‌கிறாரா ஜெயல‌லிதா: கருணா‌‌நி‌தி!

சனி, 6 செப்டம்பர் 2008 (16:11 IST)
த‌மிழக அமை‌ச்ச‌ர்களை பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றி வ‌ந்த ஜெயல‌லிதா, இ‌ப்போது ‌பிரதம‌ர் அள‌வி‌ற்கு மு‌ன்னே‌றி‌யிரு‌க்‌கிறா‌‌ர். இத‌ன் மூல‌ம் கூ‌ட்ட‌ணி வை‌க்க க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்களு‌க்கு தூ‌ண்டி‌ல் போட முனை‌கிறாரா? எ‌ன்று முதலமை‌‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதி‌‌ல் அ‌றி‌க்கை‌யி‌ல், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நம்பகத்தன்மையை பிரதமர் இழந்து விட்டதாகவும், அவர் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் பிரதமர் பதவி விலக வேண்டுமென்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?

பதவியிலே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஏதோ ஒன்றைச் சொல்லி, அவர்கள் எல்லாம் பதவி விலகி விட வேண்டும், ஊழல்கள் பல புரிந்த இவர் பதவியிலே வந்து அமர்ந்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என்கிறார். தமிழகத்திலே தான் இப்படி எதற்கெடுத்தாலும் ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஒவ்வொரு அமைச்சராகப் பதவி விலக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது பிரதமர் அளவிற்கு முன்னேறியிருக்கிறார். இவர் தோழமை கொள்ள முயன்ற பா.ஜ.க. மட்டும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானதா? இல்லையென்றால் கம்யூனிஸ்ட்களுக்கு இந்த அறிக்கை மூலம் தூண்டில் போட முனைகிறாரா? இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் தான் ஜெயலலிதா பிரதமரை பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க 600 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதே?

மின் வெட்டு தமிழகத்திலே மட்டுமில்லை. எல்லா மாநிலங்களிலும் இருக்கின்றது. அதனைச் சரிக்கட்டவும், சமாளிக்கவும் தினந்தோறும் அதிகாரிகளை அழைத்து விவாதிக்கின்றோம். அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி அங்கேயும் முடிந்த அளவிற்கு மின்சாரத்தைப் பெற முயற்சிக்கின்றோம்.

மக்களுக்கு மின்வெட்டு காரணமாக எந்த அளவிற்கு சிரமங்களைக் குறைக்க வேண்டுமோ, அதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். அதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் தான் புரிந்தும் புரியாமல் அரசை குறை கூறுகிறார்கள்.

பெண் ஒருவரே பூசாரியாக பணியாற்றலாம் என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருக்கிறதே?

வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு அது. மதுரை உசிலம்பட்டி நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்த பின்னத் தேவர் என்பவரின் மகள் தன் தந்தையார் கோவில் பூசாரியாக பணியாற்றியதாகவும், அவரது மறைவுக்குப் பிறகு தான் அந்தப்பணியை ஆற்ற மற்றவர்கள் தடுப்பதாகவும் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, சட்டங்களிலும், பூசாரிகளுக்கான விதிகளிலும் பெண்கள் பூஜை செய்வதைத் தடுக்க எதுவும் இல்லை. இந்த மனுதாரர் தொடர்ந்து பூஜை செய்யலாம் என்று தீர்ப்பு கூறியிருக்கிறார் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.