அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் மிகக் கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டே 5 மணிநேரத்தை எட்டிவிட்டது.
அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டுகளையும் கணக்கில் சேர்த்தால், ஒட்டுமொத்த தமிழகமும் பல மணி நேரம் இருளில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதை உணர முடிகிறது. மின்வெட்டிலிருந்து தமிழகத்தை மீட்க வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.
அதன் முதல் கட்டமாக வரும் 9ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி எங்களது அமைதியான எதிர்ப்பைத் தெரிவிக்க முடிவெடுத்துள்ளோம்'' என்று வெள்ளையன் கூறியுள்ளார்.