அப்போது அவர் பேசுகையில், பா.ம.க.வை பொறுத்தவரை டாடா, பிர்லா குடும்பத்தின் குழந்தைகள் முதல் பாமரர், பாட்டாளிகள் வீட்டு குழந்தைகள் வரையிலும் ஒரே விதமான, தரமான கல்வி கிடைக்கப்பெற வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட சமச்சீரான கல்வி முறையை இங்கே கொண்டுவர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தினார்.
அதேபோல, குடியரசுத் தலைவருக்கும், சாதாரண குடிசையில் வாழும் ஏழைக்கும் ஒரே விதமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ராமதாஸ், ஒரு சமுதாயம் உயர வேண்டும் என்றால் கல்வி அவசியம். அந்த சமுதாயம் அழிய வேண்டும் என்றால் அதற்கு மது இருந்தால் போதும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தொழில் வளர்ச்சியை கணக்கிட்டால் இந்தியாவில் முன்னணியில் உள்ள 10 மாநிலங்களில் தமிழகம் இடம்பெறவில்லை. இங்கு தொழில் தொடங்க வருபவர்களுக்கு அதற்குரிய வசதிகளை ஒரே இடத்தில் உடனடியாக உருவாக்கித்தர வேண்டும். அத்தகைய நிலை இங்கே இல்லை.
கல்வியை தனியாருக்கு விட்டு விட்டு அரசே மதுவை விற்கும் அதிர்ச்சிமிக்க கொடுமை இங்கே நடக்கிறது. நல்ல சமுதாயமும், நல்ல நாடும் உருவாவதற்கு நம்முடைய பண்பாடும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.