ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு, தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக விஸ்வந்து பரிஷத் மற்றும் சங்பரிவார் அமைப்பினர் கடந்த ஒருவார காலமாக தாக்குதல் நடத்துகின்றனர்.
மத்திய அரசும், ஒரிசா மாநில அரசும் உடனடியாக செயலில் இறங்கி கிறிஸ்தவ மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். கிறிஸ்தவ மக்கள் மீதான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராக பா.ஜ. கட்சியினர் போராட்டம் நடத்துவது, தமிழ்நாட்டிலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கலவரங்களை ஏற்படுத்திவிடும்'' என்று வரதராஜன் கூறியுள்ளார்.