2,400 உலமா‌க்களு‌க்கு ஓ‌ய்வூ‌திய‌ம்: த‌மிழக அரசு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (17:31 IST)
''2,400 உலமா‌க்களு‌க்கு மாத‌ம் ரூ.750 ‌வீத‌ம் அவ‌ர்க‌ள் வா‌ழ்நா‌ள் வரை‌யி‌ல் உலமா ஓ‌ய்வூ‌‌திய‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

உலமா ஓ‌ய்வூ‌திய ஒ‌ப்ப‌ளி‌ப்பு‌க்குழு கூ‌ட்ட‌ம் சு‌ற்று‌ச் சூழ‌ல் ம‌ற்று‌ம் வ‌க்ஃ‌ப் அமை‌ச்ச‌ர் மை‌‌தீ‌ன்கா‌ன் தலைமை‌யி‌ல் தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்றது.

முத‌ல் கூ‌ட்ட‌த்‌தி‌ன் போது உலமா ஓ‌ய்வூ‌திய‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை 2,200 ‌லிரு‌ந்து 2,400 ஆக உய‌ர்‌த்‌தியதையடு‌த்து, அ‌திக‌ப்படியாக 200 உலமா‌க்க‌ள் ஓ‌ய்வூ‌திய‌ம் பெற வ‌ழிவகு‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்‌ப‌ட்டது.

உலமா ஓ‌ய்வூ‌திய‌ம் கோ‌‌ரி ‌நிலுவை‌யி‌ல் இரு‌ந்த 200 ‌வி‌ண்ண‌ப்பதார‌ர்களு‌க்கு உலமா ஓ‌ய்வூ‌திய‌ம் அனுமத‌ி‌க்க‌ப்‌ப‌ட்டது. இவ‌ர்களுட‌ன் சே‌ர்‌த்து மொ‌த்த‌ம் 2,400 உலமா‌க்களு‌க்கு மாத‌ம் ரூ.750 ‌வீத‌‌ம் அவ‌ர்க‌ள் வா‌ழ்நா‌ள் வரை‌யி‌ல் உலமா ஓ‌ய்வூ‌திய‌ம் வழ‌‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்