ஒகேனக்கல் குடிநீர் விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக முன்னேற்ற கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:
தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் நதிகள் இணைக்கப்பட வேண்டும்.
மீனவர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், மீன் வலையை உலர்த்தும் இடமாகவும், வழிபாட்டுத் தலமாகவும் விளங்கி வந்த 255 ஏக்கர் பரப்பளவுள்ள கட்சத் தீவு சிறிலங்காவுக்கு அளிக்கப் பட்டிருப்பதை மீட்டு இந்தியாவிற்கே சொந்தமென அறிவிக்க வேண்டும்.
ஒகேனக்கல் குடிநீர் விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் கர்நாடக முதலமைச்சர் மீதும், அமைச்சர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டம் ஏற்கனவே தொடங்கி வேலை நடந்து வரும் வழித்தடத்திலேயே நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.