விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் செல்வம் பெருந்தகை, அக்கட்சியில் இருந்து விலகி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மங்களூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக செல்வம் பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கும் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை செல்வபெருந்தகை சந்தித்து பேசினார். இன்று பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து விடுவார் என்று கூறப்படுகிறது.