தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஏற்கெனவே பணியமர்த்தப்பட்ட 74 உதவிப் பொறியாளர்கள் போக மீதம் உள்ள 26 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணையை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
மேலும் குடிநீர் வாரியத்தில் 20 ஆண்டுகள் விபத்தின்றி பணிபுரிந்த 88 ஓட்டுனர்களுக்கு தங்கப் பதக்கமும், 10 ஆண்டுகள் விபத்தின்றி பணி புரிந்த 13 ஓட்டுநர்களுக்கு சேமிப்புப் பத்திரத்தையும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.