செ‌ன்னை ஐ.ஐ.டி வளாகத்தில் காமராஜர் சிலை: சர‌‌த்குமா‌ர் கோ‌ரி‌க்கை!

புதன், 30 ஜூலை 2008 (13:04 IST)
''செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய தொ‌ழி‌‌ல் நு‌ட்ப கழக (ஐ.ஐ.ி) வளாகத்தில் காமராஜர் சிலையை நிறுவ வேண்டும்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''இந்தியாவில் உள்ள தொ‌‌‌ழி‌ல் நு‌ட்ப கழக‌ங்களிலேயே மிகச்சிறந்த பெயரோடும், உலகளவில் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கு முதன்மையான தரவரிசை பெற்றும் சென்னை தொ‌‌ழி‌ல் நு‌ட்ப கழக‌ம் விளங்குகிறது.

இந்த தொ‌ழி‌ல் நு‌‌ட்ப கழக‌த்தை தொடங்குவதற்கு அன்றைய முதல்வராக இருந்த காமராஜரின் முயற்சியே காரணம். காமராஜரின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்ட தொ‌‌ழி‌ல் நு‌ட்ப கழக‌த்‌தி‌ல் கல்வி கற்ற விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே பெருமை சேர்த்து வருகின்றனர்.

இந்த இனிய தருணத்தில் காமராஜரை நன்றி பெருக்கோடு நினைவுகூரும் விதமாக சென்னை தொ‌‌ழி‌ல் நு‌ட்ப கழக‌த்‌தி‌ன் பொன்விழா ஆண்டில் அவருடைய உருவச் சிலையை அத‌ன் வளாகத்தில் நிறுவவேண்டும். பொன் விழாவில் பங்கேற்கும் முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, மத்திய அரசு அதை நிறைவேற்ற வேண்டுகோள் வைக்க வேண்டும்'' எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்