ஆக‌ஸ்‌ட் 8ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் வாக்காளர் பட்டியலில் பெயர் சே‌ர்‌க்கவு‌ம்: நரேஷ் குப்தா!

புதன், 30 ஜூலை 2008 (10:35 IST)
''வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆக‌‌ஸ்‌ட் 8ஆ‌ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்'' என்று த‌மிழக தலைமை தே‌ர்த‌‌ல் அ‌திகா‌ரி நரேஷ் குப்தா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌திக‌்கு‌றி‌ப்‌பி‌ல், ''தொகுதி மறுவரையறைக்கு பிறகு தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகமெங்கும் கடந்த 16ஆ‌ம் தேதி முதல் 24ஆ‌ம் தேதி வரை வெளியிடப்பட்டது.

பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் குறித்த விண்ணப்பங்களை பட்டியல் வெளியான 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் விண்ணப்பங்களை ஆகஸ்‌ட் 8ஆ‌ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேலை நாட்களில் இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு சிலருக்கு பிரச்சினைகள் இருப்பதாக கூறியதால் அதனையும் பரிசீலித்து ஆகஸ்‌‌ட் 2, 3 ஆ‌கிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள், பட்டியலில் விடுபட்டவர்களின் வீடுகளுக்கு வந்து உரிய விண்ணப்ப படிவங்களை கொடுத்து பெயர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அதே சமயம் வீடுவீடாக சென்று பட்டியலை சரிபார்க்கும் பணியிலும் 100 சதவீதம் ஈடுபடுவார்கள்'' எ‌ன்று நரே‌ஷ்கு‌ப்தா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்