கோவை, நீலகிரி மாவட்ட சாலையை சீரமைக்க ரூ.7 கோடி: டி.ஆர். பாலு உ‌‌த்தரவு!

செவ்வாய், 29 ஜூலை 2008 (18:23 IST)
தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ரூ.7 கோடி செலவில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதி வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.209) விளங்குகிறது.

வாகனங்கள் அதிகளவில் சென்றதாலும், சமீபத்தில் பெய்த கன மழையாலும் இந்த நெடுஞ்சாலையின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் சாலையை சீரமைக்க அனுமதி வழங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதன்படி, என்.எச்-209 தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஈச்சனாரி-ஆத்துப்பாலம் வரையிலான பகுதி ரூ.4.83 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இதே நெடுஞ்சாலையில் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் இந்திரா நகர் - பாசூர் வரையிலான பகுதி ரூ.2.25 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது.

உடுமலைப்பேட்டை நகரில் புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயவும் முழு அளவில் ஆரா‌ய்‌ந்து பா‌ர்‌க்க ரூ.12 லட்சம் அனுமதி அளித்து மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்