கள்ள நோட்டை கண்டறிவது குறித்து நாளை விழிப்புணர்வு முகாம்!
வியாழன், 24 ஜூலை 2008 (18:59 IST)
கள்ள நோட்டுக்களை கண்டறிவது எப்படி என்பதை விளக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகமும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் இணைந்து நாளை விழிப்புணர்வு முகாம் நடத்துகின்றன.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையின் ஜி.ஏ. சாலையில், இலக்கம் 164-ல் உள்ள மரகதம் மாளிகையில் இந்த முகாம் நாளை காலை 10 அணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. பழைய, கிழிந்த கரன்சி நோட்டுகளையும் இங்கு மாற்றிக் கொள்ளலாம். சில்லறைகளும் பெற்றுக் கொள்ளலாம்.
முகாமை ரிசர்வ் வங்கியின் செனனை அலுவலக பொது மேலாளர் (வழங்கல்) டி.சேத்தி தொடங்கி வைக்கிறார். கள்ள நோட்டுக்களை கண்டறிவது, கரன்சிகளை பராமரிப்பது ஆகியவை குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இம்முகாமில் விளக்கம் அளிக்கின்றனர்.