எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் நீக்கம்: வைகோ!

வியாழன், 24 ஜூலை 2008 (13:01 IST)
''க‌ட்‌சி‌யி‌ன் முடிவு‌க்கு ‌விரோதமாக செய‌ல்ப‌ட்ட எ‌ல்.கணேச‌ன், செ‌‌ஞ்‌சி ராம‌ச்ச‌ந்‌திர‌ன் ஆ‌கியோ‌ர் க‌ட்‌சி‌யி‌ன் அன‌ை‌த்து பொறு‌ப்‌பி‌ல் இரு‌ந்து‌ம் ‌நீ‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள்'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மக்களவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் முடிவுக்கு விரோதமாக இவ‌ர்க‌ள் இருவரு‌ம் வா‌க்க‌ளி‌த்து‌ள்ளதா‌ல் இ‌ந்த முடிவு வைகோ எடு‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம் அவ‌ர்க‌ள் இருவரு‌ம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்‌பு‌ ம‌ற்று‌ம் க‌ட்‌சி‌யி‌ன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள் எ‌ன்று வைகோ அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ம‌த்‌திய அரசு‌க்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க்க கூடாது எ‌ன்று ம.‌தி.மு.க. கொறடா உ‌த்தர‌வி‌ட்டு‌ம் இல.கணே‌ச‌ன், செ‌‌ஞ்‌சி ராம‌ச்‌ச‌ந்‌திர‌ன் ஆ‌கியோ‌ர் அரசு‌க்கு எ‌திராக வா‌க்க‌ளி‌த்தன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்